Date:

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை எதிர்வரும் மாதம் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் மிகப்பெரிய நெருக்கடியாக இருந்த ரூபாவின் பெறுமதி, இன்று சாதாரண நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. நமது அத்தியாவசிய இறக்குமதிகளுக்கான நமது இருப்பு அளவு வலுப்பெற்று வருகிறது.

அடுத்த மாதத்திற்குள் வாகனங்களுக்கான ஏறக்குறைய 270 HSP ஹோட் தவிர மற்ற அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளையும் அடுத்த மாதத்திற்குள் தளர்த்தும் திறன் எங்களிடம் உள்ளது. எதிர்வரும் மாதமளவில் அது இடம்பெறும்.

அதனூடாக, விலை நிலைத்தன்மைக்கு பாரிய நிவாரணம் கிடைக்கக்கூடும். ஏனென்றால், தற்போது அவற்றில் சிலவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், சந்தையில் தேவைக்கு ஏற்ற வழங்கல் இல்லை. அதுமட்டுமின்றி விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது.

எனவே, எதிர்காலத்தில் அரசாங்கம் இந்த திறந்த சந்தைக் கொள்கை தொடர்பில் செயற்படுமே தவிர தேவையற்ற தலையீட்டை செய்ய எதிர்பார்க்காது. அங்கிருந்து, அனைத்து வணிக சமூகமும் நியாயமான வர்த்தகத்திற்கு நகரும் என்று நாங்கள் நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கந்தானை நக‌ரி‌ல் முழு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபர்

பிரதான வீதியின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் ஒரு நபர்...

15 முறை பறக்கும் பலே கில்லாடி 35 கடவுச்சீட்டுகளுடன் சிக்கினார்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு...

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை...

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின்

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின் இவர். பெயர் சலீம் முஹ்சீன். பசி,...