இலங்கைக்கு 10 ரயில் எஞ்சின்களை வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
கடனுதவியின் அடிப்படையில் இந்த ரயில் எஞ்சின்கள் இலங்கைக்கு கிடைப்பதாக ரயில்வே பொது முகாமையாளர் W.A.D.S.குணசிங்க தெரிவித்துள்ளார்.
அவற்றை கொண்டுவருவதற்கு முன்னர் அவற்றின் தரங்களை ஆராய்வதற்காக ரயில்வே துறை அதிகாரிகள் குழுவொன்று இந்தியாவிற்கு செல்வதாக அவர் கூறியுள்ளார்.
எஞ்சின்கள் இல்லாமையால் ரயில் போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.
பழைய ரயில் எஞ்சின்கள் பழுதுபார்க்கப்பட்டு சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள போதிலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் அவற்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW