ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நேபாள பிரதமர் Pushpa Kamal Dahal ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி நியூயோர்க் சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மெட்டா (Meta) நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் நிக் கிளெக்(Nick Clegg) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று(19) நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.
இணையத்தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் வெறுப்பு பேச்சுகள் மற்றும் போலிச் செய்திகளை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் புதிய நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.
இதனிடையே, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர்(Samantha Power) மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா(Sheikh Hasina) ஆகியோரையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் நேற்று முன்தினம்(18) ஆரம்பமானது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW