Date:

உலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு!

ஐ .நா. பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக நியுயோர்க் நகருக்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு உலகத் தலைவர்களை சந்தித்து விசேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

ஐ.நா. பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் (Yoon Suk Yeol) ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று நியுயோர்க்கில் இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகளுக்கான தென் கொரிய நிரந்தர வதிவிட தூதுக்குழு அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, தென்கொரிய ஜனாதியினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டதோடு, சிநேகபூர்வ கலந்துரையாடலின் பின்னர் இரு தலைவருகளுக்குமிடையில் உத்தியோகபூர்வ கலந்துரையாடலும் இடம்பெற்றது.

1978 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தென்கொரியாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் தொடர்ச்சியாக முன் கொண்டுச் செல்லப்பட வேண்டும் என்ற இணக்கப்பாட்டுடன், தொடர்பாடல்களை விரிவுபடுத்திக்கொள்வது தொடர்பாகவும் தலைவர்கள் நீண்ட கலந்துரையாலில் ஈடுபட்டனர்.

விரைவில் இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக ஒப்பந்தத்தை கைசாத்திட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

விரைவில் தென் கொரியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இதன்போது அழைப்பு விடுத்தார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இரண்டு ஆண்கள் எப்படி ஒரு குடும்பத்தை உருவாக்க முடியும்?

பேருவளையில் உள்ள புனித மரியா தேவாலயத்தில் நடைபெற்ற மத விழாவில் உரையாற்றிய...

விருந்துபசாரம் சுற்றிவளைப்பு – இளம் பெண் உட்பட 21 பேர் கைது

கடுவெல வெலிவிட்ட பகுதியில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல் விருந்தில்...

இலங்கையின் 49 ஆவது பிரதம நீதியரசர் பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி...

விஜய் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அதிர்ச்சியில் தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக...