Date:

‘ஒரு நாளில் ஆயிரம் எதிர்பார்ப்புகள்’ சமூக சேவை திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்களின் வாழ்வை ஒளிரச் செய்யும் பிரைம் குழுமம்

இலங்கையிலுள்ள சமூகங்களை கட்டியெழுப்புவதற்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புக்களை வழங்கும் பாரிய மற்றும் ICRA [A-] நிலையான கடன் மதிப்பீட்டைக் கொண்ட இலங்கையின் பாரிய காணி கட்டட துறை நிறுவனமான பிரைம்; குழுமம் கொவிட் தொற்றுநோயால் வாழ்வாதாரத்தை இழந்த மொரட்டுவை பகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ‘ஒரு நாளில் ஆயிரம் எதிர்பார்ப்புகள்’ பெரு நிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வு வேலைத்திட்டத்தின் கீழ் உலருணவுப் பொருட்களை வழங்கியுள்ளது.

இந்த ‘ஒரு நாளில் ஆயிரம் எதிர்பார்ப்புகள்’ பெரு நிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வு வேலைத் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தின் கீழ், மொரட்டுவை சுனாமி வீட்டுவசதி திட்ட குடியிருப்பில் வாழும் குடும்பங்களுக்கு கடந்த ஜூன் 23ஆம் திகதி அன்று அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மொரட்டுவை பிரதேச சபை செயலாளர் இசங்கா உடவத்த, உயன தெற்கு கிராம சேவகர் எச்.ஆர்.எம் பிரியஞ்ஜித், மாவட்ட பேரிடர் முகாமைதத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர், விங் கமாண்டர் மகேஷ் குணரத்ன மற்றும் பிரைம் குழுமத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டங்கள் மற்றும் சமூக இடைவெளிக்கு ஏற்ப உள்ளுர் சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் இந்த நன்கொடை வழங்கப்பட்டது. பிரைம் குழுமத்திலுள்ள அனைத்து ஊழியர்களின் அர்ப்பணிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட, இந்த மாபெரும் சமூக பொறுப்புணர்வு முயற்சியால் மேலும் இரண்டு பெரு நிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வு வேலைத் திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

‘கொவிட் தொற்றுநோயால் தமது அன்றாட வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாத லட்சக்கணக்கான மக்கள் தற்போது ஆதரவற்றவர்களாக உள்ளனர், வருமானம் இல்லாததன் காரணமாக தமது வாழ்க்கையை கொண்டு நடத்த முடியவில்லை, அல்லது அந்த குடும்பங்களின் அடிப்படை தேவைகளை வழங்குவதற்கு மாற்று வழி கூட இல்லை. எனவே, ஒரு பொறுப்பான நிறுவனமாக, இந்த கடினமான நேரத்தில் நாங்கள் சில தியாகங்களைச் செய்துள்ளோம், மேலும் துன்பத்தில் இருக்கும் நமது சமூகத்தினரின் வாழ்க்கையில் சிறிது நிம்மதியைக் கொடுக்க முற்பட்டோம். இதன் அடிப்படையில், பிரைம் குழுமத்தின் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட சமூகங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உடனடியாக உலருணவுப் பொருட்களை வழங்கினர். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பூமியில் சிறந்த இடத்தை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை உணர்ந்து, பிரைம் குழுமத்தின் சக ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட ‘ஒரு நாளில் ஆயிரம் எண்ணங்கள்’இன் உன்னதமான சமூக பொறுப்புணர்வு முயற்சிக்கும், இந்த கடினமான காலத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் அளிக்கும் ஆழ்ந்த அனுதாபத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்று பிரைம் குழுமத்தின் தலைவர் பிரேமலால் பிராக்மனகே கூறினார்.

இந்த ‘ஒரு நாளில் ஆயிரம் எதிர்பார்ப்புகள்’ பெரு நிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வு முயற்சியின் விளைவாக கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மூன்று பிரிவுகள் அடையாளம் கண்டுள்ளதோடு, அவர்களின் எதிர்கால சமூக பொறுப்புணர்வு திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளது. இந்த சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு இடர் முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு ஆகியன பூரண ஒத்துழைப்புக்களை வழங்குகின்றன.

கொவிட் தொற்றுநோயின் மூன்றாவது அலையுடன் ஏற்பட்ட பாதிப்பால் நாட்டின் அனைத்து துறைகளிலும் பாரிய விளைவைக் கொண்டிருந்தது, இந்த ஆபத்தான சூழலிலிருந்து நாட்டையும், மக்களை மீட்டெடுப்பதற்கு இலங்கையிலுள்ள வர்த்தக சமூகமாக இயன்றளவு பங்களிப்பையும் வழங்க பிரைம் குழுமம் முன்னிலை வகித்தது. பிரைம் குழுமம் மருத்துவ உபகரணங்களை வழங்குதல் மற்றும் சுகாதார ஊழியர்கள் மற்றும் கொவிட் பரவுவதைத் தடுக்க உறுதிபூண்டுள்ள பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களுக்கும் பல உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரைம் குழுமம்

பிரைம் வர்த்தக குழுமம் முழுமையான இலங்கை வர்த்தக நிறுவனம் என்பதுடன் LMD சஞ்சிகையினால் 2019 ஆண்டில் நாட்டின் வர்த்தகங்கள் மத்தியில் கௌரவமான வர்த்தக நாமங்கள் அடங்கிய நிறுவனங்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டது. அத்துடன் பிரைம் குழுமத்தின் தலைவர் மற்றும் அதன் துணை தலைவி ஆகியோரை LMD சஞ்சிகையினால் 2019ஆம் ஆண்டில் நாட்டின் சிறந்த 100 வர்த்தகங்களைச் சேர்ந்த ‘Realty Visionary’ and ‘Power Woman’இனால் மதிப்பீடு செய்யப்பட்டதுடன், பிரபலமான PropertyGuru Asia Property Awards விருதுவழங்கும் நிகழ்வில் ‘Best Developer’ மற்றும் ‘Best Luxury Condo Development’ என்ற விருதுகளையும் வெல்வதற்கு பிரைம் குழுமத்திற்கு முடிந்தது. Asia One சஞ்சிகையினால் கௌரவிக்கப்படும் ஆசியாவின் விசேட இலச்சினைகளுக்குள் இடம்பிடித்துள்ளதுடன் 2018ஆம் ஆண்டு இலங்கைகயில் சிறந்த தொழில்முனைவோர் என்ற அந்தஸ்தையும் பிரைம் குழுமம் பெற்றமை குறிப்பிடதத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

இன்றைய வானிலையில் ஏற்படும் மாற்றம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ...

YMMA திஹாரி கிளையினால் 1000 தென்னங்கன்றுகள் விநியோகம் (Pics)

YMMA திஹாரி கிளையின் ஏற்பாட்டில் 1000 தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கும் நிகழ்வு...

மனைவியின் மாணவிகளுக்கு முன் நிர்வாணமாக நின்ற 32 வயதுடைய நபர்

மொனராகலை அதிமலே பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் தரம் 5 இல் கல்வி...

இலங்கை வங்குரோத்தான நாடல்ல, இறக்குமதித் தடை நீக்கப்படும் – ஜனாதிபதி

கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதால்...