மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அல்லது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆறு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுமியின் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் தந்தை, ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்ட மாளிகாகந்த நீதிமன்றில் வழக்கு ஒன்றிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW