சுற்றுச்சூழல் தொடர்பில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அரச நிறுவனங்களை மீண்டும் மறுசீரமைப்பு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மறுசீரமைப்பு செயற்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு தேவையான சட்டங்களை மேலும் வலுப்படுத்துவதற்கு குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி செயற்பிரிவின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW