Date:

Prime Residencies PLC இலங்கையின் முதலாவது Online Virtual Property அணுகல் பதிவு விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது

இலங்கையின் மிகப்பெரிய காணிகட்டட விற்பனை நிறுவனமான பிரைம் குழுமத்தின் அண்மைய சொகுசு மாடி வீட்டுத் தொகுதி திட்டமான நீர்கொழும்பு Prime Amber Skye இலங்கையில் காணி கட்டட விற்பனை துறையில் முதலாவது Online Virtual Property விற்பனை அணுகுமுறையை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. நீர்கொழும்பு கடற்கரைக்கு எதிரே Prime Amber Skye சொகுசு மாடி வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த Online Virtual Property அணுகுமுறையின் மூலம் மொத்த திட்டத்தின் 30% விற்பனையை பிரைம் குழுமத்தால் செய்ய முடிந்தது. பிரைம் குழுமத்தின் நிதி ஸ்திரத்தன்மை, 25 ஆண்டுகால வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் மாறிவரும் காணி கட்டட விற்பனைத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான குழுவின் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த சிறந்த சந்தைப்படுத்தல் செயல்திறனில் நன்கு பிரதிபலிக்கின்றன.

‘இன்றைய வர்த்தக உலகின் வெற்றிக்கு புதிய சிந்தனைகளும் புத்தாக்கங்களும் ஒரு முக்கிய காரணியாகும். இதைக் கருத்தில் கொண்டு, எங்கள் முதலாவது Online Virtual Property அணுகுமுறை இலங்கையில் காணி கட்டட துறையில் ஒரு திருப்புமுனையாக மட்டுமல்லாமல், முழு உலகமும் கொவிட் தொற்றுநோயால் எதிர்கொள்ளும் புதிய உலகமயமாக்கலின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வாய்ப்பாகவும் இருந்தது. இலங்கையின் முதலாவது Online Virtual Property அணுகுமுறைக்கான வாடிக்கையாளர் ஈர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல் வெற்றி எங்கள் எதிர்பார்ப்புகளை அதிகரிப்பதில் பிரைம் குழுமத்தில் உள்ள வாடிக்கையாளர் நம்பிக்கையை பிரதிபலிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகவும் விவரிக்கப்படலாம். மேலும், Prime Amber Skye சொகுசு மாடி வீட்டுத் திட்டம், இந்த Online Virtual Property அணுகுமுறை மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு திறந்து வைக்கப்பட்டது, நீர்கொழும்பு பகுதியில் ஒரு பெரிய முதலீடாக இருந்தது, எனவே கொவிட் தொற்றுநோயை எதிர்கொள்ளும் வாடிக்கையாளர் வீட்டைப் பாதுகாப்பதில் நாங்கள் மிகுந்த ஆர்வம் காட்டினோம். இந்த நிலைமை நிச்சயமாக எங்கள் விற்பனை செயல்திறன் மற்றும் இலங்கையின் முதலாவது Online Virtual Property அணுகுமுறைக்கான ஒட்டுமொத்த அணுகலுக்கு வழிவகுத்தது,’ என பிரைம் குழுமத்தின் தலைவர் பிரேமலால் பிராக்மனகே தெரிவித்தார்.

இரண்டு சொகுசு மாடிக் கட்டடங்களாகக் கட்டப்படும் Amber Skye Residenciesஇன் ஒன்று 19 மாடிகளும் மற்றொன்று 7 மாடிகளும் கொண்டு அமையும். Amber Skye Residencies வீட்டு தொகுதியின் கீழ் கட்டப்படவுள்ள மொத்த சொகுசு வீடுகளின் எண்ணிக்கை 145 ஆகும். 1 முதல் 3 படுக்கையறைகளைக் கொண்ட பல்வேறு வகையான வசதிகளுடன் கூடிய வீடுகளையும் வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்ய வாய்ப்பு கிட்டியுள்ளது. 19.5 மில்லியன் ரூபாவில் இருந்து ஜூலை 17 முதல் Amber Skye Residencies சொகுசு கட்டடத் தொகுதியில் வாடிக்கையாளர்கள் விலை கொடுத்து வாங்குவதற்காக திறந்திருக்கும். பிரைம் குழுமம் 2024க்குள் வீட்டுக் கட்டடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளது.

இங்கு நிர்மாணிக்கப்பட்டு வரும் சொகுசு Pநவொழரளநள வீடுகள் மற்றும் சொகுசு வீடுகளுக்கு இயற்கையான வெளிச்சம் வரக் கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன, புதிய கட்டடக்கலை நுட்பங்களைப் பயன்படுத்தி வீட்டிற்கு அதிக இடத்தை சேர்க்கவும் நவீன வீடுகளுக்கு தேவையான அம்சங்களை சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்து சமுத்திரத்தில் சூரியன் மறையும் போது தென்படும் ஊதா நிற வானம் கண்ணைக் கவரும் காட்சி சந்தேகத்திற்கு இடமின்றி வேறு எங்கும் ஒப்பிடமுடியாத ஒரு அனுபவத்தை மனதில் கொண்டு வரும். மேலும், நீர்கொழும்பு கோல்டன் பீச்சின் இருப்பிடமும், சில நிமிடங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லக்கூடிய வசதியும் இந்த சொகுசு அடுக்குமாடி வீட்டுத் தொகுதியின் மற்றொரு அதிநவீன சொகுசு வீட்டுத் திட்டமாக மாற்றும்.

இந்த சொகுசு மாடி வீடுகளின் உரிமையாளர்களுக்கு தினசரி 24 மணி நேர வரவேற்பு சேவைகள், விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடவசதி, திறந்த மாடி நீச்சல் குள வசதிகள், குழந்தைகளுக்கான நீச்சல் குள வசதிகள் மற்றும் விளையாட்டு மைதானம், யோகா பயிற்சி கூடம், தொலை தூரத்தை ரசிக்கக் கூடிய தொலைநோக்கி வசதி, உடற்பயிற்சி கூடம், BBQ Terrace, உடற்பயிற்சி உணவகம் மற்றும் சந்திப்பு மையம், அத்துடன் சாரதிகளுக்கான ஓய்வு பகுதி, ஆகியன Amber Skye Residencies வீட்டு மாடி கட்டடத் தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வளாகத்தில் பணியாளர்கள் குடியிருப்பு, சலவை வசதிகள், டிஜிட்டல் கண்காணிப்பு கேமரா அமைப்புடன் 24 மணி நேர பாதுகாப்பு, மின்சார கார் சார்ஜிங் நிலையங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டி நிறுத்துவதற்கான வசதிகளும் உள்ளன.

சுவையான உணவை அனுபவிக்கக்கூடிய பல நட்சத்திர சுற்றுலா ஹோட்டல்களுக்கு அருகில் அமைந்துள்ளதுடன், வரலாற்று சிறப்பு மிக்க நீர்கொழும்பில் சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவர்ந்துள்ள முகத்துவார ஈரநிலங்கள், அத்துடன் நீர்கொழும்பு  ஒல்லாந்தர்களின் கோட்டை, மாஓயா, ஒல்லாந்தர்களின் மணிக்கூட்டுக் கோபுரம், மொரவல கடற்கரை போன்ற இடங்களுக்கு மிக விரைவாக செல்லவும் முடியும்.

பிரைம் குழுமம்

இலங்கையின் காணி கட்டட விற்பனை துறையில் சர்வதேச கடன் தரமான ICRA [A-] நிதி நிலைத் தன்மையைப் பெற்ற ஒரேயொருரு குழுமமான பிரைம் குழுமம் காணி மற்றும் கட்டட மேம்பாட்டுத் துறையில் சுமார் 25 வருடகால அனுபவத்தைக் கொண்ட முழுமையான இலங்கை வர்த்தக குழுமமாகும். பிரைம் குழுமம் LMD சஞ்சிகையினால் 2019 ஆண்டில் நாட்டின் வர்த்தகங்கள் மத்தியில் கௌரவமான வர்த்தக நாமங்கள் அடங்கிய நிறுவனங்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டது. அத்துடன் பிரைம் குழுமத்தின் தலைவர் மற்றும் அதன் துணை தலைவி ஆகியோரை LMD சஞ்சிகையினால் 2019ஆம் ஆண்டில் நாட்டின் சிறந்த 100 வர்த்தகங்களைச் சேர்ந்த ‘Realty Visionary’ and ‘Power Woman’இனால் மதிப்பீடு செய்யப்பட்டதுடன், பிரபலமான PropertyGuru Asia Property Awards விருது வழங்கும் நிகழ்வில் ‘Best Developer’ மற்றும் ‘Best Luxury Condo Development’ என்ற விருதுகளையும் வெல்வதற்கு பிரைம் குழுமத்திற்கு முடிந்தது. Asia One சஞ்சிகையினால் கௌரவிக்கப்படும் ஆசியாவின் விசேட இலச்சினைகளுக்குள் இடம்பிடித்துள்ளதுடன் 2018ஆம் ஆண்டு இலங்கைகயில் சிறந்த தொழில்முனைவோர் என்ற அந்தஸ்தையும் பிரைம் குழுமம் பெற்றது. அத்துடன் தனியார் நிறுவன குழுமமாக இருந்த பிரைம் குழுமத்தில் சேவை மற்றும் முதலீடுகளை விஸ்தரிக்கும் நோக்கில் Prime Lands Residencies பொதுப் பங்கு விநியோகம் (IPO) மேற்கொள்ளப்பட்டதுடன் சிறந்த ஒத்துழைப்புடன் முடிவடைந்த இந்த பங்கு விநியோகத்தின் மூலம் குழுமத்தின் பங்குரிமை தொடர்பில் முதலீட்டாளர்களில் பெரும்பாலானோருக்கு சந்தர்பம் வழங்கியதனால் சர்வதேச தரத்திற்கு கட்டட விற்பனை நிறுவனமாக உருவாகுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காசாவில் நிலைமை மேலும் மோசமடையும் சூழலில் பேச்சைத் தொடர்வது குறித்து இஸ்ரேல் ஆலோசனை !

இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் காசாவில் மனிதாபிமான நெருக்கடி தீவிரம் அடைந்திருக்கும்...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி உயர்வு !

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (26)  அதிகரித்த ...

யாழில் மோட்டார் சைக்கிளின் சில்லில் சிக்கிய சேலை ! பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை !

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணொருவர் விபத்தில்...

20 வீதத்திற்கும் மேலாக குறைக்கப்படும் மின் கட்டணம்? வெளியான தகவல்

மின் கட்டணத்தை இருபது வீதத்துக்கும் மேல் குறைக்க வேண்டும் என பாராளுமன்ற...