கிளிநொச்சி – மலையாளபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபடுபவர்களை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
மலையாளபுரம் – புது ஐயங்கன் குள பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நடைபெறுவதாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, இன்று காலை 6.30 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 3 பொலிஸார் குறித்த இடத்தை சுற்றிவளைப்பதற்காக சென்றுள்ளனர்.
குறித்த பொலிஸாரில் ஒருவர் காட்டுப் பகுதியில் இருந்து வௌியே வரவில்லை.
பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மோப்ப நாய்களின் உதவியுடன் காணாமால் போன பொலிஸ் உத்தியோகத்தரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அடர்ந்த காடு என்பதனால், உள்ளே என்ன நடந்தது என்பது தமக்கு தெரியவில்லையென கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW