லிபியா நாட்டில் ஏற்பட்ட பெரும் சுனாமி மற்றும் வெள்ளத்தின் காரணாமாக 20000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மொரோக்கா நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக 3,000 மேற்பட்டோர் பலியான நிலையில், 10000-ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்த பாதிப்பின் தாக்கத்தில் இருந்தே இன்னும் உலகம் மீண்டிருந்த நிலையில், தற்போது லிபியா நாட்டை வெள்ளம் ஒன்று முற்றிலுமாக புரட்டிப்போட்டுள்ளது.
அந்நாட்டில் ஏற்பட்ட டேனியல் என்ற பெயரிடப்பட்ட புயலின் காரணமாக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இந்த கனமழையின் காரணமாக அந்நாட்டில் அமைந்துள்ள இரண்டு பெரு அணைகளை முற்றிலுமாக சேதமடைந்து உடைந்துள்ளன.உடைந்த இந்த அணைகளில் இருந்து பெருவெள்ளமானது ஏற்பட்டு பல நகரங்களை முற்றிலுமாக அளித்துள்ளது.
சுனாமி பேரலையை விட அதிபயங்கர வெள்ளத்தால் லிபியா நாட்டின் டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் போன்ற நகரங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன . இந்த பெருவெள்ளத்தில் சிக்கி மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை தற்போது வரை அதிகாரபூர்வமாக 6,000 பேர் மரணமடைந்துள்ளார் என கூறப்படும் நிலையில், அந்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டலாம் என அஞ்சப்படுகிறது.
டெர்னா நகர மேயர் Abdulmenam al-Ghaithi அளித்த பேட்டி ஒன்றில், பெருவெள்ளத்தில் மொத்தம் 18,000 பேர் முதல் 20,000 பேர் வரை பலியாகி இருக்கக் கூடும் என கூறியது உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. டெர்னா நகரை ஒட்டிய கடலின் கரைகளில் அநேக இடங்களில் மனித உடல்களாக சிதறி கிடக்கிறது என மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த பேரதிர்ச்சியான பாதிப்பில் உதவ உலக நாடுகள் முன்வந்துள்ளன. நமது இந்தியாவும் லிபியா மீட்புப் பணிகளில் உதவுவதாக உறுதி அளித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW