லிபியாவை தாக்கிய டேனியல் புயல் காரணமாக 2000 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமற்போயுள்ளனர்.
வடகிழக்கு லிபியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
தெற்கு ஆப்பிரிக்காவின் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், லிபியாவை தாக்கிய டேனியல் புயலால் அந்நாட்டின் Derna, Misrata, Shahhat உள்ளிட்ட பல பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
புயல், கனமழை வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளப்பெருக்கில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
வெள்ளம் பாதித்த Derna நகரை பேரழிவு மண்டலமாக அந்நாட்டுப் பிரதமர் ஒசாமா ஹமாட் (Ossama Hamad) அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW