குழந்தைகள் உட்பட இலங்கையர்களின் டிஜிட்டல் கல்வியறிவு, உணர்வுகள் மற்றும் சிந்தனையை வளர்ப்பது திறன்களை மேம்படுத்துதல், எதிர்கால தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளைத் திறப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் முழு இலங்கையையும் உள்ளடக்கும் வகையில் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
‘டி.பி.கல்வி நிலையம் மற்றும் தொழிநுட்ப வளாகத்தின் 60 ஆவது கிளை கண்டி மாவட்டத்தில் வல்கம் பிரிவிலுள்ள பூசெல்லாவ ஸ்ரீ மணிந்தாராம ஆலயத்தினை மையமாக கொண்டு கடந்த ஜூன் மாதம் முதல் இயங்கி வருகின்றது.
36 நவீன கணினிகள் பொருத்தப்பட்ட மையத்தில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சிங்கள முஸ்லிம் தமிழ் சமூகத்தை சேர்ந்த 1134 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.அனைத்து சமூகத்தை சேர்ந்த மாணவர்களும் ஓரே இடத்தில் கல்வி கற்கிறார்கள் என்பது ஒரு சிறப்பம்சமாகும் .
நாடு முழுவதும் உள்ள மூன்று இனத்தவரும் ஒன்றாகக் கல்வி கற்பது இதுவே முதல் முறை.
16 புத்த பிக்குகள் 903 சிங்களக் குழந்தைகள்இ 112 தமிழ் குழந்தைகள் மற்றும் 103 முஸ்லீம் குழந்தைகள் கல்வி பயில்கின்றனர் .
“கல்வி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடைய முடியாது நாடு வளர்ச்சியடைய குடும்பம் வளர்ச்சியடைய வேண்டும். குடும்பங்கள் ஒன்று சேர்ந்தால் தான் ஒரு கிராமம் வளரும்.கிராமங்களை ஒன்றிணைப்பதன் மூலம் மட்டுமே ஒரு மாவட்டத்தை முன்னேற்ற முடியும் .
நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால், அதை மிகச் சிறிய இடமான குடும்பத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் படிப்பை முடித்த 6 மாதத்தில் வேலை கிடைக்கும் என்றும் DP கல்வி நிலையத்தின் தலைவர் தம்மிக பெரேரா தெரிவித்தார்