தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்று மோசடியான இணையத்தளம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதி வழங்குவதாக கூறி மக்களிடம் பணம் வசூலித்ததாக தபால் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப உதவிப் பணிப்பாளர் காயத்ரி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் குறித்த தகவல்களை 1950 என்ற அவசர எண்ணுக்கு தெரிவிக்கலாம்.
இது தவிர, தொலைபேசி எண்கள் மூலம் தகவல் தெரிவிக்கலாம்:
011 2 542 104
011 2 334 728
011 2 235 978
இது தொடர்பான சம்பவம் தொடர்பில் பொலிஸ் கணினி குற்றப் பிரிவினரால் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காயத்ரி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW