Date:

SLTB போக்குவரத்து சேவைகளுக்காக புதிய தகவல் நிலையம் அறிமுகம்

போக்குவரத்து அமைப்பில் நிலவும் பிரச்சினைகளை தெரிவிப்பதற்காக தகவல் நிலையம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

1958 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலம் பொதுமக்கள் புகார்கள், விசாரணைகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்கலாம் என்று அதன் செயல் வணிக மேலாளர் எரந்த தில்ஹான் தெரிவித்தார்.

இதேவேளை, சுற்றுலாத்துறையை மையப்படுத்தி போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

உணவு மற்றும் பானம் உள்ளிட்ட சொகுசு வசதிகளை உள்ளடக்கியதாக 17 டபுள் டெக்கர் பேருந்துகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், கொழும்பு நகரத்தை சுற்றி 4 சுற்றுகள் சுற்றி வரவுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

எதிர்காலத்தில் அறுகம்பை, பெந்தோட்டை, மிரிஸ்ஸ, எல்ல-வெல்லவாய, பொலன்னறுவை மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களை இலக்காகக் கொண்டு இந்த பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

(Clicks) அநுரவுக்கு மாலைதீவில் அமோக வரவேற்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28)...

பாடசாலை மாணவர்களுக்கு இரண்டுவேளை இடைவேளை

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள்...

பொரளை விபத்து – கைதான சாரதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

பொரளை மயான சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக...

ஜனாதிபதி மாலைதீவை சென்றடைந்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28)...