நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சபரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இன்று (10) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றர் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மன்னார், வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW