தற்சமயம் சுமார் 120 அதிகாரிகளின் பற்றாக்குறையால் தொற்றுநோய் நிலைமைகளை நிர்வகிப்பதில் எதிர்காலத்தில் நெருக்கடிகள் ஏற்படக்கூடும் என பூச்சியியல் அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இவ்வருடம் மாத்திரம் சுமார் பத்து சுகாதார பூச்சியியல் அலுவலர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிலர் விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளதாகவும், சிலர் வேலைகளை விட்டுவிட்டு வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வருடாந்தம் சுமார் 5 உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவதால், தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW