Date:

போலி வீசாவுடன் இத்தாலிக்கு செல்ல முயன்ற இளைஞர் கைது!

 

போலந்து வதிவிட விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (செப். 08) மாலை 06.45 மணியளவில் கட்டாரில் உள்ள தோஹா நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL- 217 இல் ஏற முற்பட்ட போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பில் வசிக்கும் 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,ஒரு தரகருக்கு 4 மில்லியன் பணம் செலுத்தி போலி ஆவணங்களை பெற்றுக்கொண்டமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கிளியரன்ஸ் கவுன்டரில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சந்தேகத்தை எழுப்பியதை அடுத்து, சந்தேக நபரிடம் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவரது ஆவணங்கள் மீதான தொழில்நுட்ப சோதனைகள் போலியானவை என உறுதி செய்யப்பட்டது.

சந்தேக நபரின் கைப் பையில் இருந்து இரண்டு போலி குடிவரவு முத்திரைகள், ஒரு இலங்கை குடிவரவு முத்திரை மற்றும் போலி கல்ஃப் ஏர்லைன்ஸ் விமான டிக்கெட்டுடன் மற்றொரு கடவுச்சீட்டையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

(Clicks) அநுரவுக்கு மாலைதீவில் அமோக வரவேற்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28)...

பாடசாலை மாணவர்களுக்கு இரண்டுவேளை இடைவேளை

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள்...

பொரளை விபத்து – கைதான சாரதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

பொரளை மயான சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக...

ஜனாதிபதி மாலைதீவை சென்றடைந்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28)...