இரு நாடுகளுக்கும் இடையேயான இரு தரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புகள் குறித்து , இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரும் பிரதமர் தினேஸ் குணவர்தனவும் அலரிமாளிகையில் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது , தனியார் துறையின் பங்களிப்புடன் புதிய முதலீட்டு திட்டங்களை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு பிரித்தானியா உயர்ஸ்தானிகருக்கு பிரதமர் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்வி, நிதிச் சேவைகள், மருந்துகள் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளிலான முதலீட்டை இலங்கை ஊக்குவிப்பதாகவும் பிரதமர் தினேஸ் குணவர்தன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW