தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்றிரவு தெஹிவளை ஓபன் பிளேஸ் மைதானத்திற்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவர் ஓபன் பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேலை முடிந்து வீடு திரும்பிய இளைஞன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் சென்றுக் கொண்டிருந்த போதே குறித்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
வேறு யாரையாவது குறி வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அவர்களைக் கண்டுபிடிக்க தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.