Date:

பல சேவைகளை உள்ளடக்கி ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி

மின்சாரம், எரிபொருள், சுகாதாரத் துறைகளை அத்தியாவசிய சேவைகளாக தொடர்ந்தும் நீடித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் பல துறைகளின் அத்தியாவசிய சேவைகளின் பிரகடனத்தை நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.

1979 ஆம் ஆண்டின் இலக்கம் 61 இன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆவது பிரிவின்படி அ ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஏப்ரல் 17, 2023 முதல் அமுல்படுத்தப்பட்டது.

அதன்படி, மின்சாரம்,பெற்றோலியம் மற்றம் எரிபொருள் விநியோகம், அஞ்சல் சேவைகள், வைத்தியசாலைகள், தனியார் வைத்தியசாலகைள், மருந்தகங்கள் அதுபோன்ற ஏனைய நிறுவனங்கள் போன்றவற்றில் இடம்பெறும் அனைத்து சேவை வேலை அல்லது உழைப்பு பராமரிப்பு வரவேற்பு கவனிப்பு உணவு மற்றும் சிகிச்சை தொடர்பான அனைத்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அளுத்கம தர்கா நகரில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் கைது

இரும்புக் கம்பியால் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கத் தயாரான சந்தேக நபரைக் கட்டுப்படுத்த,...

ரணில் டிஸ்சார்ஜ்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில்...

பிணை மனு நிராகரிப்பு: சஷீந்திரவுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக...