Date:

அகதிகள் முகாம் இனி, இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் – மு.க.ஸ்டாலின்

இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம் என்பது இனிமேல், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

வேளாண்மை, கால்நடை, மீன்-பால் வளத் துறைகள் மானியக் கோரிக்கை மீது  நடைபெற்ற விவாதத்தின்போதே முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, அங்கு மேலும் உரையாற்றிய அவர், “மானியக் கோரிக்கையில் இப்போது உறுப்பினா் பேசும் போதும், வெள்ளிக்கிழமை நான் அறிவிப்புகளை வெளியிடும் போதும் இலங்கை தமிழா்கள் அகதிகளாக ஆக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

அகதிகள் முகாம் இனி, இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும். ஏனென்றால் அவா்கள் ஆதரவற்றவா்கள் அல்ல. நாம் அவா்களுக்குத் துணையாக இருக்கிறோம். அந்த உணா்வுடன் அகதிகள் முகாம் என்று அழைக்காமல் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என்று அழைக்க அரசு ஆணையிட்டுள்ளது” என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு !

நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும்...

தலவாக்கலையில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு !

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோலி ரூட் தோட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பக...

இந்தோனேசியாவில் மண்சரிவில் சிக்கி 14 போ் உயிரிழப்பு !

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கனமழையைத் தொடா்ந்து ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 14...

இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்ட வாகனங்கள் !

யாழ்ப்பாணம் - நாவாந்துறைப் பகுதியில் முச்சக்கரவண்டி மற்றும் பட்டா வாகனம் என்பன...