Date:

அகதிகள் முகாம் இனி, இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் – மு.க.ஸ்டாலின்

இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம் என்பது இனிமேல், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

வேளாண்மை, கால்நடை, மீன்-பால் வளத் துறைகள் மானியக் கோரிக்கை மீது  நடைபெற்ற விவாதத்தின்போதே முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, அங்கு மேலும் உரையாற்றிய அவர், “மானியக் கோரிக்கையில் இப்போது உறுப்பினா் பேசும் போதும், வெள்ளிக்கிழமை நான் அறிவிப்புகளை வெளியிடும் போதும் இலங்கை தமிழா்கள் அகதிகளாக ஆக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

அகதிகள் முகாம் இனி, இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும். ஏனென்றால் அவா்கள் ஆதரவற்றவா்கள் அல்ல. நாம் அவா்களுக்குத் துணையாக இருக்கிறோம். அந்த உணா்வுடன் அகதிகள் முகாம் என்று அழைக்காமல் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என்று அழைக்க அரசு ஆணையிட்டுள்ளது” என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும்...

ஆப்கானை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற இலங்கை!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20...

ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்!

திருகோணமலையில் நிலநடுக்கம்

திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில்...