க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் தவறான பதிவுகள் வெளியிடப்பட்டு வருவதாக உண்மைச் சரிபார்ப்பு இணையத்தளம் (Fact Crescendo Sri Lanka) தெரிவித்துள்ளது.
இதுவரை பெறுபேறுகள் வெளியிடப்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறான போலி செய்திகளைப் பார்த்து ஏமாற வேண்டாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை ஒகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக ஜயசுந்தர கூறியுள்ளதாக உண்மைச் சரிபார்ப்பு இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW