இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா சில நாட்களுக்கே போதுமானதாக உள்ளது.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தினால் கடந்த 16 ஆம் திகதி முதல் கோதுமை மா இறக்குமதி முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவின் கையிருப்பு தீர்ந்து வருவதால் கோதுமை மா இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் அரசாங்கத்திடமிருந்து இதுவரை நல்ல பதில் கிடைக்கவில்லை.
கோதுமை மா இறக்குமதியை நிறுத்துவதன் மூலம் நாட்டில் கோதுமை மா உற்பத்தி செய்யும் இரு நிறுவனங்களும் மாவு ஏகபோகத்தை நாட்டில் உருவாக்குவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இதன் காரணமாக எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கும் எனவும் தெரிவித்தனர்.
துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டகோதுமை மாவின் மொத்த விலை 180 ரூபாவாகவும், இந்நாட்டின் இரண்டு நிறுவனங்களின் மொத்த விலை 200 ரூபாவாகவும் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW