பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய, இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி இந்த வாரம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் லொறிகள், பாரவூர்திகள் மற்றும் பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இந்த வர்த்தமானி மூலம் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளனர்.
வாகன இறக்குமதியை துரிதப்படுத்துவதன் மூலம் டொலரின் பெறுமதி மீண்டும் உயர முடியும் என நிதி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW