இலங்கையில் எரிபொருள் சந்தைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள சினோபெக் நிறுவனம், குறைந்த விலையில் எரிபொருளை வெளியிடுமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் அந்த கோரிக்கைக்கு எண்ணெய் நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை. சினோபெக் அனைத்து வகையான எரிபொருட்களையும் எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் விலையை விட லிட்டருக்கு மூன்று ரூபாய் மலிவாக விற்பனை செய்ய கோரியுள்ளது.
ஏற்கனவே 130 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இருபது எரிபொருள் நிலையங்கள் நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடர்பில் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது கூட நிறுவனம் தனது முதலாவது எரிபொருளை இலங்கைக்கு கொண்டு வந்து சேமித்து வைத்துள்ளதுடன் இன்னும் சில தினங்களில் தமது எரிபொருளை விற்பனை செய்ய ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW