Date:

டொலர் ஆசையில் ரூபாயை இழந்த பெண் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை

அமெரிக்காவில் இருந்து 70 ஆயிரம் டொலர், கைகடிகாரம், தங்க ஆபரணங்கள் கொண்ட பொதி ஒன்றினை வாட்சப் மூலம் வீடியோ படத்தை அனுப்பி, சுங்க திணைக்களத்தில் கடமையாற்றும் பெண் போல் நடித்தவரிடம் மட்டக்களப்பிலுள்ள பெண் ஒருவர் 95 ஆயிரம் பணத்தை பறிகொடுத்துள்ளார்.

இதுபற்றி தெரியவருவதாவது, அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளைகார பெண் ஒருவர்  மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பெண் ஒருவருடன் வாட்சப்  மூலம் தொடர்புகொண்டு இருவரும் நீண்ட காலமாக நட்புறவாடி வந்துள்ளனர்.

இந்நிலையில் உங்களுக்கு பெரும் பணம் தங்க ஆபரணங்கள் வெகு விரைவில் கிடைக்கும் தான் பெரிய பணக்காரர் என பெண்ணிடம் அமெரிக்க நண்பி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவதினமான  செவ்வாய்க்கிழமை (08) மட்டக்களப்பு பெண்ணுக்கு இலங்கையிலுள்ள கையடக்க தொலைபேசியின் இலக்கத்தில் இருந்து வாட்சப் மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தான் விமான நிலைய சுங்க திணைக்களத்தில் கடமையாற்றி வருதாகவும் உங்கள்  பெயர் விலாசத்துக்கு அமெரிக்காவில் உள்ள உங்கள் வெள்ளைக்கார நண்பி பொதி ஒன்றை அனுப்பியுள்ளார் என்று கூறியுள்ளார்.

அந்த பொதியில், 70 ஆயிரம் டொலர் , தங்க ஆபரணங்கள், கைக்கடிகாரம் இருப்பதாகவும் டொலரை இவ்வாறு பொதியில்  அனுப்ப முடியாது எனவும் இது சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த பொதியை சுங்க திணைக்களத்தில் இருந்து விடுவித்து கிளியர் செய்து தருவதற்கு 2 இலச்சத்து 50 ஆயிரம் ரூபா அனுப்புமாறும் பொதியில் உள்ள 70 ஆயிரம் கொண்ட டொலரை வீடுயோ படம் எடுத்து வாட்சப் மூலம் அனுப்பி காண்பித்து பணத்தை வங்கி ஊடாக அவசரமாக அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வாட்சப் மூலம் அனுப்பிய வீடியோ படத்தை நம்பி உடனடியாக மோசடி கும்பல் அனுப்பிய வங்கி கணக்கில் 95 ஆயிரம் ரூபாயை அனுப்பிய பின்னர் சுங்க திணைக்களத்தில் வேலை செய்வதாக நடித்த பெண்ணின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திய போது அந்த தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து தான்  95 ஆயிரம் ரூபா பணத்தை இழந்து ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்துள்ளார்.

இதேவேளை அண்மை காலங்களாக வெளிநாட்டில் இருந்து பல இலட்சம்  ரூபாய் பெறுமதியான பொருட்கள் பெட்டியில் வந்துள்ளது என்றும் அதனை விடுவிப்பதற்கு சுங்க அதிகாரிகளுக்கு பணம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கும் இவ்வாறான மோசடி கும்பலுக்கு  ஒரு இலட்சம் தொடக்கம் 6 இலட்சம் ரூபாவரையான பணத்தை அனுப்பி பலர் இழந்துள்ளனர்.

எனவே இவ்வாறான மோசடி கும்பல் தொடர்பாக விழிப்பாகவும் அவதானமாகவும் பொதுமக்கள் செயற்பட வேண்டும்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரூ.18 கோடியை ஏப்பம் விட்ட வங்கி அதிகாரி கைது

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரி ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் நிதி...

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதல்

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது. தெற்கு சிரியாவில்...

அஞ்சல் திணைக்கள உதவி அத்தியட்சகராக பாத்திமா ஹஸ்னா

அஞ்சல் திணைக்களத்தில் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக கே. பாத்திமா ஹஸ்னா...

ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்’: பொருளாதாரத் தடை: நேட்டோ எச்சரிக்கை

ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும்...