Date:

காபூல் விமான நிலையத்தில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை

காபூல் விமான நிலையத்தில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

இராணுவ தளபதியினால் இது தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க துருப்பினர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

எனினும் பிரித்தானிய தூதரக அதிகாரிகள் உட்பட சகலரும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 170 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு ஐ.எஸ் – கே அமைப்பினர் உரிமை கோரியிருந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா ஆளில்லா விமானக் கருவி தாக்குதலை மேற்கொண்டது.

இதில் ஐ.எஸ் – கே அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் தாக்குதல்களுக்கான திட்டத்தை வகுத்தவர் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...