Date:

இரு தரப்பினருக்கு இடையில் மோதல்: இளைஞன் கொலை

கடுவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 08 மைல்கல் பிரதேசத்தில் நிர்வாண  நிலையில் நேற்று (02) கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து,  மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

29 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாகவும் அவர் கொதடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறே கொலைக்கு வழிவகுத்துள்ளதாகவும், முல்லேரிய பகுதியில் வைத்து இளைஞன் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, கடுவலை பகுதியில் முச்சக்கரவண்டியில் விட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய மற்றும் அங்கொட பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தடி மற்றும் கம்பி என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

36, 46 மற்றும் 47 வயதுடைய சந்தேகநபர்கள் வெல்லம்பிட்டிய மற்றும் அங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...

மனிதநேயமிக்க நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்

அமெரிக்காவும், உலகமும் மிகவும் பணிவான, கனிவான நீதிபதிகளில் ஒருவரை இழந்துவிட்டன. நீதிபதி...

ஸ்ரீலங்கன் முறைகேடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணைக் குழுவின் விசேட அறிவிப்பு

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும்...