கொழும்பில் மனைவியைக் கணவன் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.
இச் சம்பவம் நேற்று (02-08-2023) மட்டக்குளியில் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கணவன் கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மூன்று பிள்ளைகளின் தாயாரான 39 வயதான பாலச்சந்திரன் செல்வமலர் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையாளியான 43 வயதுடைய கணவன் வீட்டை விட்டுத் தப்பியோடியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW