மல்வானே, வல்கம பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறமுள்ள கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திமாஷி ஜானித்மா மதுஷங்கா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .சிறுமி தனது தாயுடன் வீட்டில் இருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனடிப்படையில், பியகம சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஹர்ஷஜித் குணசேகரவினால் சம்பவம் நடந்த இடத்தில் மரண விசாரணை நடத்தப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW