இலங்கையில் எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படுவது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி தேவையான மதிப்பீட்டின் பின்னர் அனைத்து வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் கோட்டா அடுத்த மாதம் அதிகரிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டுவிட்ட பதிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.