அங்கொடை – தெல்கஹவத்தையில் உள்ள சொகுசு வீடொன்றில் பெண் ஒருவரால் நடத்தப்பட்ட சூதாட்ட நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
20 பேர் கொண்ட பொலிஸ் குழு ஒரே நேரத்தில் வீட்டைச் சுற்றிவளைத்த போது, பிரபல வர்த்தகர்கள் உட்பட 15 பேர் சிக்கினர்.
மேலும், ஒரு இலட்சம் ரூபா பந்தயத் தொகையையும் கைப்பற்றியுள்ளனர்.
தெல்கஹவத்தையில் இரண்டு மாடி வீடொன்றில் உள்ள இந்த பெண் பல வருடங்களாக இந்த சூதாட்ட நிலையத்தை நடத்தி வருவதாக அங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.