கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்டு, அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட ஹரின் மற்றும் மனுஷ ஆகிய இருவரையும் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
ஹரின் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் காணி அமைச்சராகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக மனுஷ நாணயக்காரவும் பதவியேற்றுக்கொண்டனர். இவ்விருவரையும் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. கட்சியின் செயற்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.