2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று காலை பாராளுமன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
மே 29 ஆம் திகதி பரீட்சையை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப் பரீட்சையை 10 நாட்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
இதனிடையே 2022 க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் 10 பாடங்களுக்கான வினாத்தாள் திருத்த பணிகள் நேற்று ஆரம்பமாகியுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.






