Date:

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் குறித்து பரிந்துரைகளை வழங்க ஆலோசனைக் குழு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்வது அல்லது பிணை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்வதற்காக ஆலோசகர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தின் 13 ஆம் சரத்திற்கு அமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் ஆலோசகர் குழு நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் சட்டப்பிரிவு பணிப்பாளர் நாயகம், உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹரிஸ் குப்த ரோஹனதீர குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதம நீதியரசர் அஷோக டி சில்வாவின் தலைமையிலான இந்த குழுவில், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி A.A.R.ஹெய்யன்துடுவ மற்றும் ஓய்வுபெற்ற சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவிக்கும் அல்லது தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்ந்து, அவர்களுக்கு பிணை வழங்குதல் அல்லது அவர்களை விடுதலை செய்தல் உள்ளிட்ட தீர்மானங்களை மேற்கொண்டு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்வதை இந்த ஆலோசகர் குழுவிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்படும்- அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு பின்னர் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்படும்...

தனுஷ்க குணதிலக்க விடுவிப்பு!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில்...

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியிருக்கும் 115 உணவுக் கொள்கலன்கள் வீணாகும் அபாயம்

கொழும்பு துறைமுகத்தில் உணவுப் பொருட்கள் அடங்கிய 115 கொள்கலன்களில் உள்ள பொருட்கள்...

இலங்கையில் பணிபுரியும் பெண்களை தாக்கும் ஆபத்து

இலங்கையில் பணி புரியும் பெண்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய்...