அளுத்கம தர்கா நகரில் மாமரச்சந்தி பகுதியிலுள்ள புகைப்படமெடுக்கும் நிலையத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை நகரசபையின் தீயணைப்பு வாகனங்களால் தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.குறித்த தீ விபத்து ஏறபட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
photos – lankadeepa