Date:

ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடி அதிகரிக்கும் என அச்சம்

ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடி மேலும் அதிகரிப்பதற்கு முன்னர், அங்கிருந்து வெளியேற எதிர்பார்க்கும் மக்களுக்காக, அண்டை நாடுகள் தங்களின் எல்லைகளைத் திறக்க வேண்டும் என நேட்டோ இராஜ தந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈரான், பாகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் முதலான நாடுகள், தங்களது எல்லைகளைத் திறப்பது முக்கியமானதாகும் என காபூலில் உள்ள இராஜ தந்திரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

ஆகாய மற்றும் தரை மார்க்கங்களை மிக வேகமாக பயன்படுத்த வேண்டியுள்ளதாக, பெயர் குறிப்பிட விரும்பாத அந்த இராஜதந்திரி கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக வறட்சியினாலும், யுத்தத்தினாலும் பொருளாதார பாதிப்பை எதிர்நோக்கிய நிலையில், கொவிட்-19 தொற்றினாலும் பாதிப்புகள் அதிகரித்துள்ள ஆப்கானிஸ்தானில், உணவுக்கு பாரிய தடுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டேவிட் பீஸ்லி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 14 மில்லியன் ஆப்கானிஸ்தானியர்கள் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டலாம் என எச்சரிக்கை விடுத்துள்ள அவர், ஆப்கானிஸ்தானுக்கு உணவுகளை வழங்குவதற்காக 200 மில்லியன் டொலரை வழங்குமாறு சர்வதேச சமூகத்தினரிடம் கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

*அனைத்து பாடசாலைகளுக்கும் நாடளாவிய ரீதியில் விடுமுறை

எதிர்வரும் மே மாதம் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில்...

பேராயர் மால்கம் ரஞ்சித் ஆண்டகையை வத்திக்கான் புறக்கணிப்பதாக பகிரப்படும் போலிச்செய்தி

பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, கொழும்பு பேராயர் மால்கம்...

டேன் பிரியசாத் கொலை – பிரதான சந்தேகநபர் கைது

டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று (24) முதல் ஆரம்பமாகவுள்ளதாக...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373