சூரியன் வடக்கு நோக்கி நகர்வதால், ஏப்ரல் 05 முதல் இன்று (15) வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேர் மேலே உள்ளது.
இன்று (15ம் திகதி) நல்லூர், பரந்தன், சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளுக்கு பிற்பகல் 12:10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும்.