பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மதுபோதையில் செலுத்திய வாகனம் முன்னால் வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவர், மீகொட- ஆட்டிகல வீதியில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் கடமையாற்றிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் காரில் பயணித்த ஒன்றரை வயது மகள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.