இந்திய மாநிலமான ஹரியானாவில் இந்துத்துவா ஆயுதக் குழுவொன்று மசூதியை சேதப்படுத்தியது மற்றும் பள்ளி வளாகத்திற்குள் வணக்கவழிப்பாட்டில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு பதற்றம் நிலவியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இரவு மாநிலத்தின் சோனேபட் நகரில் உள்ள முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் போது ஆயுதம் ஏந்திய குழுவினர் ஒரு அங்கு இருந்தவர்களை தாக்கி காயப்படுத்தியதுடன் மற்றும் மசூதியை சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு குறித்த இனவாத குழு அங்குள்ள மக்களைத் தாக்கும் புகைப்படங்கள் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல் நடத்தியவர்கள் கைகளில் கத்திகள் மற்றும் மூங்கில் தடிகளை ஏந்தியவாறு சுதந்திரமாக சுற்றித்திரிந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சோனேபத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.