இன்று முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காலபகுதியல் மக்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் முடிந்தவரை வீட்டிற்குள் அல்லது மூடிய பகுதிகள் அல்லது நிழலான பகுதிகளில் இருக்கவும், குளிரூட்டிகள் அல்லது மின்விசிறிகளைப் பயன்படுத்தவும், குளிக்கவும் அல்லது குளிர்ந்த நீரில் கழுவவும், வெளிர் நிற, வெளிர் பருத்தி ஆடைகளை அணியவும், சூரிய ஒளியில் இருந்து உடலைப் பாதுகாக்க தொப்பி அணியவும் குடை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.