கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (04) பிற்பகல் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்பவர்கள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதியமைச்சுக்கு செல்ல தடை விதித்து கோட்டை நீதவான் இன்று காலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டால், நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் நீதவான் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.