நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அரசியல் தலைவர்கள், சிவில் சமூகம் மற்றும் ஆர்வலர்களை பலமுறை துன்புறுத்தியும், கறுப்புச் சட்டங்களின் கீழ் போலிக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
நரேந்திர மோடி தலைமையிலான அரசு, முஸ்லிம் பெரும்பான்மையினரை சிறுபான்மையினராக மாற்ற ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (Rashtriya Swayamsevak Sangh) இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஸ்ரீநகரில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் அரசு ஊழியர்களின் சொத்துக்கள், நிலங்களை அபகரிப்பது மற்றும் வேலைவிடுப்பு செய்வது போன்ற கொடூரமான கொள்கையை இந்திய அதிகாரிகள் வகுத்துள்ளனர் என்றும் இதுவரை ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
காஷ்மீரின் அனைத்து நிறுவனங்களிலும் காஷ்மீர் அல்லாதவர்களை வேலைக்கு அமர்த்தும் செயல்முறையை இந்தியா திட்டமிட்ட முறையில் தொடங்கியுள்ளது. என அவர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.