ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து புதிய அரசை அமைக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
இன்று ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எமது கட்சியின் முன்னாள் தலைவர் என ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து புதிய வேலைத்திட்டத்தின் கீழ் புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தயார் எனவும் ஜனாதிபதி தேர்தல் வரையில் அந்த வேலைத்திட்டத்தில் தொடர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.