எல்ல நீர்வீழ்ச்சியில் இடம்பெற்ற துயரமான சம்பவம் அனைவரையும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
16 வெளிநாட்டவர்களை காப்பாற்றிய இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவர் கித்துல்கல பிரதேசத்தை சேர்ந்த என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருவியில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்ததால் ஆபத்தான நிலையில் இருந்த 16 வெளிநாட்டவர்களை 38 வயதுடைய அமில மதுசங்க காப்பாற்றியுள்ளார்.
இவருக்கு ஒரு குழந்தை ஒன்று உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.