இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு நிபந்தனையில் விடுவிக்கப்பட்ட பௌத்த குருவிற்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதம பௌத்த மதகுரு தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 22 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விஹாரை ஒன்றில் வைத்து 3 இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்ட இந்த வழங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.