பாடசாலை வேன் கட்டணம் 8 சதவீதத்தால் எதிர்வரும் மே மாதம் முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் தலைவர் என்.எம்.கே.ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பாடசாலை வேன் சங்கங்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோருக்கிடையில் கடந்த புதன்கிழமை (29) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவித்தார்.