Date:

பணம் தருகிறீர்களா? இல்லையா? – சபையில் சஜித்

நாடாளுமன்றத்தில் இன்று (24) கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஒ​ரேயொரு சொல்லில் பதிலளிக்குமாறு கேள்​வியெழுப்பினார். அதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பல சொற்களை இணைந்து பதிலளித்தார்.

முன்னதாக கேள்வியெழுப்பிய சஜித் பிரேமதாஸ, தேர்தலை நடத்துவதற்கு,  பணம் தருகிறீர்களா? இல்லையா? அதற்கு ஒரு வார்த்தையில் பதிலளிக்குமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த 10 பில்லியனை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு  வழங்கி தேர்தலை நடத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு  இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் பிரதமர் தினேஷ் குணவர்தன,  இதுபற்றி உயர் நீதிமன்றத்தில் பல விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.அந்தத் தீர்ப்புகளின் படியே நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகரசபை ஊழல்: பொதுமக்களிடம் உதவி கோரல்

2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர...

3 இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்

சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று...

சிறைச்சாலை உத்தியோகத்தரின் கையை வெட்டி திருடியவர்கள் கைது

ஹிக்கடுவ பகுதியில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் கையை மன்னா கத்தியால் வெட்டிப்...

எரிவாயு தட்டுப்பாடு : அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கத் தவறினால்,லாஃப் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...