Date:

ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை இடைநிறுத்தம்

ஆசிரியர் சேவையில் இணைப்பதற்காக நாளை (25) சனிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போட்டிப் பரீட்சையை (ஆசிரியர் போட்டிப் பரீட்சை) இடைநிறுத்தி, உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

நேற்றையதினம் (23) உயர் நீதிமன்ற நீதியசர்களான விஜித் மலல்கொட, எச்.எம். நவாஸ்,  ஜனக் டி சில்வா குழாம் முன்னிலையில் அதற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு மனுக்களை பரிசீலனைக்காக அழைக்கப்பட்டபோது இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.

பட்டதாரிகள் சங்கம் இம்மனுக்களை தாக்கல் செய்திருந்ததுடன், இவ்வாறு குறித்த பரீட்சை நடாத்துவது சட்டவிரோதமானது எனவும், அதற்கான வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் மேற்கொள்ளுமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி, மனு மீதான விசாரணை முடியும் வரை, அது தொடர்பான பரீட்சையை இடைநிறுத்தி, உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபை மறுசீரமைப்பு மேலும் தாமதம்!

தேசிய மின்சக்தி கொள்கை இம்முறையும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (23)...

யாழ். சர்வதேச கிரிக்கெட் அரங்கின் கட்டுமானம் இடைநிறுத்தப்பட்டது

வட மாகாணத்தின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் அரங்கின் கட்டுமானப் பணியானது தற்காலிகமாக...

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு ஆபத்து

இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரியை நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில்...

கொழும்பு மாநகரசபை ஊழல்: பொதுமக்களிடம் உதவி கோரல்

2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர...